தமிழ்நாடு

டிஜிபி அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற ஆயுதப்படை காவலர்கள் பணியிடை நீக்கம்

Raghavendran

சென்னை டிஜிபி அலுவலகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் கடந்த 21-ம் தேதி, தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜாதி ரீதியாக ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் செயல்பட்டு தொடர்ந்து பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதாகவும், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுமுறை கேட்டால் கூட மது வாங்கி தர சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறை கூறினர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் தங்களது கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி அவர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். இதை அப்பகுதியில் நின்ற காவலர்கள் கவனித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். 

தற்கொலை முயற்சி காரணமாக ஆயுதப் படை காவலர்கள் கணேஷ் மற்றும் ரகு ஆகியோர் மெரினா காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT