தமிழ்நாடு

போராட்ட மக்களுக்கு தலைவணங்குகிறேன்: கமல்ஹாசன்

Raghavendran

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 49-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆலை மூடப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி-மதுரை பைபாஸ் சாலையில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டு வந்தன. 

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்புப் பணிக்காக 15 நாள்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாக ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சென்று போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

என் பெயர் கமல்ஹாசன், நான் தமிழர் அதற்காக தான் இங்கு வந்துள்ளேன். நான் அரசியல்வாதியாகவோ, சினிமா நடிகனாகவோ இங்கு வரவில்லை, ஒரு தனிமனிதனாக வந்துள்ளேன். உங்களுடனான என் உறவு வெறும் மொழியால் மட்டும் ஏற்பட்டதல்ல உணர்வாலும் ஏற்பட்டது. இதில் வாக்கு வங்கி செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. குற்றம் கடிதல் அரசின் வேலை, அதை அரசு செய்யவில்லை என்றால் மக்கள் செய்வார்கள். திரைத்துறையில் என்னை நிறைய புகைப்படங்கள் எடுத்துவிட்டனர். எனவே இங்கு புகைப்படத்துக்காகவும் நான் வரவில்லை. என்னிடம் சிலர் கணக்கு கேட்கின்றனர். இங்குள்ள பிரச்னைகளின் புள்ளி விவரங்களைக் கேட்கிறார்கள். நான் படிப்பு அறிவில்லாதவன்தான் ஆனால், இந்த அறிவை வைத்துதான் இத்தனை நாளாக பிழைப்பு நடத்தி வருகிறேன். இங்கு போராடி வரும் மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT