முகப்பு
தமிழ்நாடு

மூதாட்டியின் வீட்டுக்குச் சென்று உதவியதோடு, உணவை பகிர்ந்து சாப்பிட்ட கரூர் ஆட்சியர்

ஆதரவற்ற ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய ஆட்சியர் தனது மதிய உணவை அவருடன் பகிர்ந்து சாப்பிட்டார்.

Updated On : 2 ஏப்ரல், 2018 at 12:36 PM
பகிர்:


கரூர்: ஆதரவற்ற ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணையை வழங்கிய ஆட்சியர் தனது மதிய உணவை அவருடன் பகிர்ந்து சாப்பிட்டார்.

கரூர் மாவட்டம், சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராக்கம்மாள்(80). இவர் ஆதரவற்ற நிலையில் மிகவும் வறுமையில் வாடுவதாகவும்,  அரசின் உதவித்தொகை கிடைக்க ஆவன செய்யுமாறும் மனு அளித்திருந்தார். 

இதுகுறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் த. அன்பழகனுக்கு மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமிற்கு சென்றிருந்த ஆட்சியர், மூதாட்டி ராக்கம்மாளின் வீடு தேடிச் சென்று, அரசின் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கி ஆறுதல் கூறியதுடன், மூதாட்டிக்கு உதவிடுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

Advertisement

மிகவும் வறுமையில் வாடிய நிலையில், உதவித் தொகைக் கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டியுடன், தனது வீட்டில் இருந்து கொண்டு சென்ற உணவை ஆட்சியர்  அன்பழகன் பகிர்ந்து சாப்பிட்டார்.

இரண்டு வாழை இலைகளைப் போட்டு மூதாட்டியின் வீட்டிலேயே அமர்ந்து மதிய உணவை அவர் பகிர்ந்து உண்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மாவட்ட ஆட்சியர்கள் என்றால் ஏதோ வானத்தில்  இருந்து குதித்தவர்களைப் போல நடந்து கொள்ளாமல், மக்களுக்காக பணியாற்ற வேண்டியவர்கள் என்று அறிந்து, இப்படி எளிமையாக நடந்து கொள்ளும் மாவட்ட ஆட்சியர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவது நிச்சயம் நல்ல மாற்றம்தான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.