தமிழ்நாடு

ஏப்ரல் இறுதிக்குள் தயாராகுமா சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையம்?

சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையம் ஏப்ரல் மாத இறுதியில் தயாராகி, ரயில் சேவை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

ENS

சென்னை: சென்னை சென்டிரல் மெட்ரோ ரயில் நிலையம் ஏப்ரல் மாத இறுதியில் தயாராகி, ரயில் சேவை தொடங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போல, பயணிகள் மற்றும் விரைவு ரயில்களின் வரத்தால் மிகவும் பரபரப்பாக இருக்கும் எழும்பூருக்கு மற்றொரு ரயில் நிலையம் வர உள்ளது. அதுதான் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம். 

முதலில், நேரு பூங்கா முதல் சென்னை சென்டிரல் வரையிலான மெட்ரோ ரயில் நிலையம் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மெட்ரோ ரயில் நிலைய பாதுகாப்பு ஆணையர், பிற பணிகளில் ஈடுபட்டிருப்பதால், சென்னை சென்டிரல் ரயில் நிலையப் பணிகள் தாமதமாகியுள்ளன.

சென்னை சென்டிரல் - நேரு பூங்கா இடையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கினால் சுமார் 22 கி.மீ. தொலைவிலான பயணத்தை ஒரு பயணி மெட்ரோ ரயில் சேவை மூலமாகவே கடந்து விடலாம். 

இதற்கிடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், ஏப்ரல் மாத இறுதியில் ஏஜி - டிஎம்எஸ் முதல் லிட்டில் மவுண்ட் வரையிலான 4 கி.மீ. ப்ளூ லைன் சேவையையும் திறக்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவை தொடங்கினால் மொத்தமுள்ள 13 கி.மீ. தூரம் கொண்ட ப்ளூ லைன் சேவை இந்த மாத இறுதி முதல் இயங்கும் என்பதே.

எழும்பூர் ரயில் நிலையம் 4 வழிகளைக் கொண்டிருக்கும். எலிவேட்டர், படிகட்டுகள், மேம்பாலம், எஸ்கலேட்டர் என நான்கு வழிகளிலும் ஒவ்வொரு வசதிகள் செய்யப்பட உள்ளன.

மற்ற ரயில் நிலையங்களைப் போல அல்லாமல் எழும்பூர் ரயில் நிலையம் மிகப் பெரியதாக பல வசதிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம் எப்போதுமே கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தை அமைப்பதில் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு கடும் சவால் காத்திருந்தது. கடந்த 6 ஆண்டுகளாக கடுமையாக பணியாற்றினோம். சென்னையில் பூமிப் பகுதி கடுமையான பாறைகள் மற்றும் மண்ணால் நிறைந்திருந்தது. பல முறை டிரில்லிங் இயந்திரங்கள் பழுதாகின. அதையடுத்து சில அடி தூரம் தோண்டியதுமே தண்ணீர் வர ஆரம்பித்தது. அது மேலே வராத வகையில் சுமார் 1 மீட்டர் கனம் கொண்ட பாதுகாப்பு சுவர் அமைக்கப்பட்டதாக மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீயணைப்பு பணியின் போது சிலிண்டா் வெடித்து விபத்து: 13 போ் காயம்

வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

மகளிருக்கு ரூ.5,000 வழங்க அதிமுகவின் அழுத்தமே காரணம்: எடப்பாடி கே.பழனிசாமி

23.2.1976: இருஅடுக்கு ரயில் பெட்டி மேற்கூடு - பெரம்பூர் தொழிற்சாலை தயாரிக்கிறது

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

SCROLL FOR NEXT