தமிழ்நாடு

தமிழ்நாடு சுற்றுலாத் துறை: கோடைக் கால சிறப்பு சுற்றுலாத் திட்டம்

DIN

கோடைக் காலத்தையொட்டி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சிறப்புச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோடைக் காலத்தையொட்டி, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சிறப்பு சுற்றுலாத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு, ஒகேனக்கல், கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களூரூ, கேரள மாநிலம் மூணாறு ஆகிய பகுதிகளுக்குச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு: மேலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம்- 2, வாலாஜா சாலை, சென்னை-2 என்ற முகவரியிலும், 044-25333333, 25333444, 25333857, 25333850, கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். www.tamilnadutourism.org என்ற இணையதளம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

முன் பதிவை www.ttdconline.com என்ற இணையதளத்தில் செய்யலாம்; செல்லிடப்பேசி மூலம் முன் பதிவு செய்ய www.mttdonline.com என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT