தமிழ்நாடு

நெட் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி

DIN

கல்லூரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கான தேசிய அளவிலான தேர்வுக்கு (நெட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (ஏப்.12) முடிவடைய உள்ளது.
இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும், கல்லூரி -பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கும் செட் அல்லது நெட் தகுதித் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். இதில் நெட் தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான 'நெட்' தேர்வு அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டிருந்தது. அதன்படி, தேர்வானது ஜூலை 8 -ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க ஏப்ரல் 12 கடைசி நாளாகும். கட்டணம் செலுத்த ஏப்ரல் 13 கடைசி நாளாகும்.
இரண்டு தாள்கள் மட்டுமே...இந்தத் தேர்வில் இதுவரை மூன்று தாள்கள் இடம்பெற்றிருந்தன. 2018 -ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வில் இரண்டு தாள்கள் மட்டுமே இடம் பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT