தமிழ்நாடு

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா முழு உடல் பரிசோதனை மையம்

DIN

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழுஉடல் பரிசோதனை மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
குறைந்த செலவில் முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் 2016-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ரூ.10 கோடி செலவில் தொடங்கப்பட்டது.
அம்மா உடல் பரிசோதனை: இதில் மூன்று வகையான உடல் பரிசோதனைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஆயிரம் ரூபாய்க்கு அம்மா கோல்ட் பரிசோதனை, ரூ. 2 ஆயிரத்துக்கு அம்மா டைமண்ட் பரிசோதனை, ரூ. 3 ஆயிரத்துக்கு அம்மா பிளாட்டினம் என மூன்று வகையாக இந்த முழு உடற்பரிசோதனை பிரிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகம், ரத்தத்தில் சர்க்கரை, ரத்தத்தில் கொழுப்பு, தைராய்டு, கல்லீரல் செயல்பாடு, ஹெபடைடிஸ் பி, நெஞ்சு ஊடுகதிர், மிகையொலி உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். மகளிருக்கென்ற சிறப்பு உடல் பரிசோதனையில் கூடுதலாக கருப்பை வாய் பரிசோதனை, மார்பகப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, எலும்பு அடர்த்தி திறனாய்வு பரிசோதனை, பாரா தைராய்டு ஹார்மோன் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். 
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையைத் தொடர்ந்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இந்தத் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. 
இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அம்மா முழுஉடல் பரிசோதனைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக சுமார் ரூ.3 கோடியில் கருவிகள், உள்கட்டமைப்புகள் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் இரு வாரங்களுக்குள் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அமைச்சர் ஆய்வு: ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திங்கள்கிழமை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா முழு உடல் பரிசோதனை மையம், உயிர்வேதியியல் ஆய்வுக்கூடம், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடம், நோய் குறியியல் ஆய்வுக்கூடம், எச்ஐவி ஆய்வுக்கூடம் உள்ளிட்டவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

SCROLL FOR NEXT