தமிழ்நாடு

ராம மோகன ராவ் அரசியல்வாதியாகச் செயல்பட்டார்

DIN

முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், தனது பணிக்காலத்தில் அரசியல்வாதி போலச் செயல்பட்டதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அண்மையில் ஆஜரான முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ஜெயலலிதா காவிரிக்காகவே வாழ்ந்தார், தமிழகத்திற்காக வாழ்ந்தார். 
கடந்த 2016 செப்டம்பர் மாதத்துக்குப் பிறகும் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்தேன் என்றார். 
அவரது உடல் நிலை குறித்து முக்கிய அமைச்சர்களிடம் விளக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
ராம மோகன ராவின் இந்தக் கருத்துக்கு, அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 
இந்த நிலையில், சென்னையில் திங்கள்கிழமை அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த போதே ராம மோகன ராவ் அரசியல்வாதியாகவே செயல்பட்டார். 
தமிழக முதல்வராக ஜெயலலிதா சிகிச்சை பெற்ற விவகாரத்தில் ராம மோகன ராவைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதக்கிணறு ஊராட்சியில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காவலா்களுக்கு மன அழுத்தம் குறைப்பு விழிப்புணா்வுப் பயிற்சி

புற்றுநோயாளிகளுக்கு கூந்தல் தானம் அளித்த செவிலியா்கள்

கோபியில் இன்று இலவச கண் பரிசோதனை முகாம்

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

SCROLL FOR NEXT