தமிழ்நாடு

ஆசிரியர்கள் போராட்டம் அரசுக்கு அவமானம்

தினமணி

இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது அரசுக்குத்தான் அவமானம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.
 போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அரசும், காவல்துறையும் நடத்தும் விதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல்.
 உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களில் பலர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரக்கமில்லாத அரசு இன்னும் அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிக்கொண்டிருக்கிறது.
 ஆசிரியர்களைப் போராட்டம் நடத்தும் சூழலுக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பது அரசுக்கு அவமானம் ஆகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT