தமிழ்நாடு

அனுமதியில்லாமல் நடத்தப்படும் மருத்துவப் பாடங்கள்: எம்சிஐ பதிலளிக்க உத்தரவு

DIN

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் முதுநிலை மருத்துவப் பாடப் பிரிவுகளை நடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இதுதொடர்பாக, தமிழ்நாடு மருத்துவர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசு, எம்சிஐ-யின் அங்கீகாரம் இல்லாமல், முதுநிலை மருத்துவப் படிப்பு மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் குடும்ப மருத்துவம், நோய்த் தடுப்பு மருத்துவம் உள்ளிட்ட பாடப் பிரிவுகள் நடத்தப்படுவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட விவரங்களுக்கு பல்கலைக்கழகம் அளித்துள்ள பதிலில் தெரிய வந்துள்ளது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பி.எபிநேசர் பால், எம்சிஐ விதிகளின்படி ஒவ்வொரு மருத்துவப் படிப்புக்கும் சம்பந்தப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகம் அனுமதி பெற வேண்டும். ஆனால், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் அனுமதி பெறாமல் மருத்துவப் படிப்புகளை நடத்துவது சட்ட விரோதமானது' என வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு குறித்து மத்திய சுகாதாரத் துறை, எம்சிஐ மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக நிர்வாகம் வரும் ஜூன் முதல் வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT