சென்னை: சிலைகடத்தல் தொடர்பான வழக்குகளை எல்லாம் சிபிஐ விசாரிக்க உள்ள நிலையில், கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை மட்டும் சிபிஐ விசாரிக்காது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் காணாமல் போன சிலைகள் தொடர்பான வழக்குகளை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியான பொன் மாணிக்க வேல் விசாரித்து வந்தார். ஆனால் அவரது வழக்கு விசாரணையில் திருப்தி இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு அனைத்து வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைக்க உள்ளதாக சமீபத்தில் தெரிவித்தது. இதற்கான உரிய அரசாணையும் வெள்ளியன்று பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை மட்டும் சிபிஐ விசாரிக்காது என்று தமிழக அரசு தற்பொழுது தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.