தமிழ்நாடு

மோடி வரும்போது 'ஆப்சென்ட்' ஆன அழகிரி: என்ன காரணம் தெரியுமா? 

உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்த வந்த பொழுது, கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி அங்கே இல்லாதது... 

DIN

சென்னை: உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்த வந்த பொழுது, கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி அங்கே இல்லாதது தற்பொழுது கேள்விக்குள்ளாகியுள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். தற்பொழுது சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது பூத உடலுக்கு தொடர்ந்து அஞ்சலி  செலுத்தி வருகின்றனர் 

இந்நிலையில் கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்த வந்த பொழுது, கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி அங்கே இல்லாதது தற்பொழுது கேள்விக்குள்ளாகியுள்ளது.

உடல்நலக் குறைவால் மரணமடைந்த கருணாநிதியின் உடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ராஜாத்தி அம்மாள், கனிமொழி மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு ஆறுதல் கூறிச் சென்றார்.

அந்த சமயத்தில் கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி அங்கே இல்லை. ஏன் அவர் இல்லையென்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.தற்பொழுது அதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அழகிரி சமீப காலமாக கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். அவரால் நெடுநேரம் நிற்க இயலாத நிலை காணப்படுகிறது.இதனால் மோடி வந்த சமயத்தில் அழகிரி ராஜாஜி அரங்கின் பின்பகுதியில் ஒரு இடத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார் என்று திமுக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT