தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது - புதிய மீன்பிடி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

தினமணி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 27 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

தஞ்சை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததார்கள். அப்போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறி 27 தமிழக மீனவர்களை கைது செய்தனர். மேலும், 4 நாட்டு படகுகளும் அவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, தமிழக மீனவர்கள் மீது அந்நாட்டின் புதிய மீன்பிடி மசோதாவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

புதிய மீன்பிடி மசோதாவின் படி, மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை மீன்பிடிப்புக்காக இலங்கை கடற்பகுதியில் உபயோகித்தால், அவை கைப்பற்றப்படுவதோடு மீனவர்கள் 2 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்படுவர். மேலும், அவர்களுக்கு இலங்கை ரூபாய் அளவில் 50 ஆயிரம் அபராதமாக விதிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT