தமிழ்நாடு

18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியே: முதல்வர் தரப்பு வாதம்

DIN

18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியே என்று முதல்வர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி எம். சத்தியநாராயணனின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.  

இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது சரியே என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது தரப்பு வாதமாக முன்வைத்தார். 

முதல்வர், சபாநாயகர், அரசு கொறடா ஆகியோர் தரப்பு வாதம் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து பதில் வாதத்துக்காக ஆகஸ்கட் 16-ஆம் தேதிக்கு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

SCROLL FOR NEXT