தமிழ்நாடு

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன், 
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது புவனேஸ்வர் அருகே தென்கிழக்கே சுமார் 30 கி.மீ., தூரத்தில் நிலை கொண்டுள்ளது. 

இதன் காரணமாக தமிழகத்தின் இதர பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதான மழை பெய்யயலாம். அதேசமயம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தரை இடைவெளி விட்டு மழை பெய்யக்கூடும். 

எனவே, வடக்கு ஆந்திரா, வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். அதிகபட்சமாக, செங்கோட்டையில் 27 செ.மீ., சின்னக்கல்லாரில் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT