தமிழ்நாடு

அதிமுக செயற்குழு கூட்டம் ஆக.23-க்கு மாற்றம்

DIN


அதிமுக செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு:- அதிமுக செயற்குழுக் கூட்டம் வரும் 20-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் வியாழக்கிழமை (ஆக.23) சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் மறைவை முன்னிட்டு... முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு காரணமாக, ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு நாள் துக்கம் வரும் 22-ஆம் தேதியன்று நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT