தமிழ்நாடு

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

DIN

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு  கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா, கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், கனத்த மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தென் கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல்சீற்றமாக காணப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT