தமிழ்நாடு

கேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணம்: விஜயகாந்த் அறிவிப்பு

DIN

கேரளத்துக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் தேமுதிக சார்பில் அனுப்பி வைக்கப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஆலுவா, சாலக்குடி, செங்கன்னூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா ஆகிய நகரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  

இதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் வீடு, வாசல் மற்றும் உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். 

மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  

இந்நிலையில், கேரளாவுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனைத்து மாவட்ட தேமுதிக சார்பில் வரும் 24ஆம் தேதியில் இருந்து அனுப்பப்படும் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT