தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் இருந்து 23-இல் தண்ணீர் திறப்பு

DIN


திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து வியாழக்கிழமை (ஆக. 23) நீர் திறந்து விடப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து நீரை திறந்து விடக் கோரி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இந்த வேண்டுகோளை ஏற்று, திருமூர்த்தி அணையில் இருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு வரும் வியாழக்கிழமை (ஆக. 23) முதல் மொத்தம் 9,500 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன்.
இதனால் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 94,201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து உயர் மகசூல் பெற வேண்டும் என்று அந்த அறிவிப்பில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT