தமிழ்நாடு

அழகிரியைச் சேர்ப்பதன் மூலமாக திமுக வலிமை பெறும்: நாஞ்சில் சம்பத் 'அடடே' பேட்டி

அழகிரியைச் சேர்ப்பதன் மூலமாக திமுக வலிமை பெறும் என்று பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

DIN

திருவாரூர்: அழகிரியைச் சேர்ப்பதன் மூலமாக திமுக வலிமை பெறும் என்று பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக நாஞ்சில் சம்பத் வெள்ளியன்று திருவாரூர் வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது , அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது   

அழகிரியைச் சேர்ப்பதன் மூலமாக கண்டிப்பாக திமுக வலிமை பெறும்.

ஆனால் அவரைக் கட்சியில் சேர்ப்பது தொடர்பான இறுதி முடிவு கட்சியின் தலைவரான ஸ்டாலின் கையில்தான் உள்ளது.

நிலம், நீர் மற்றும் காற்று இவை மூன்றும் இருக்கும் வரையில் திராவிடம் என்பது நிலைத்திருக்கும்.

திரைத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் அரசியலில் நுழைந்து வெற்றி பெற இயலாது.

திரைத்துறையில் ஜொலிப்பவர்கள் எல்லோரும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் போல், அரசியலில் ஜொலித்து விட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பலி!

SCROLL FOR NEXT