தமிழ்நாடு

மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை: உயர் நீதிமன்ற கிளை

DIN

மதுரை: மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.  

மதுரையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் கொண்ட அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. 

விசாரணையின் முடிவில் வரும் டிசம்பர் 10ந்தேதி முதல் மதுரையில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும்படி மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

முதல் தடவையாக இந்தத் தடையை மீறினால் ரூ.500 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT