தமிழ்நாடு

கல்லீரல் நோயால் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்குப் பாதிப்பு: டாக்டர் முகமது ரேலா

DIN

மது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருதாக ரேலா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ரேலா கூறினார்.
சென்னை குரோம்பேட்டை ரேலா இன்ஸ்டிட்யூட் அன்ட் மெடிக்கல் சென்டரில் திங்கள்கிழமை நடைபெற்ற கல்லீரல் நோய் அவசர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவ உடல் பரிசோதனைத் திட்ட தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது: 
இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் கல்லீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். பிறந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டாலும், 40 முதல் 60 வயதுப் பிரிவினர்தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். 
இந்நோயை ஆரம்பநிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். அதிக உடல் உழைப்பு, உடற்பயிற்சி இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்ப்போருக்கு கல்லீரல் நோய் பாதிப்பு அதிகமாவது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கல்லீரல் நோய் சிகிச்சைக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார் டாக்டர் முகமது ரேலா. 
மருத்துவமனை நிறுவனர் எஸ்.ஜெகத்ரட்சகன், தலைவர் ஜெ.ஸ்ரீநிஷாமாறன், தலைமை மருத்துவர் கே.இளங்குமரன், மருத்துவக்குழுவினர் தினேஷ் ஜோதிமணி, நரேஷ் சண்முகம் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT