தமிழ்நாடு

சர்வதேச திரைப்பட விழா: தமிழக அரசு ரூ.75 லட்சம் நிதி

DIN


சர்வதேச திரைப்பட விழாவுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.75 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியை இந்தோ சினி அப்ரிசியேஷன் அறக்கட்டளைக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற 9-வது சர்வதேச திரைப்பட விழாவில் இருந்து தமிழக அரசு சார்பில் தொடர்ந்து நிதி அளிக்கப்பட்டு வருகிறது. 
இந்தத் தொகையானது ரூ.50 லட்சத்தில் இருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 
இந்தத் தொகையை இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷனின் பொதுச் செயலாளர் தங்கராஜிடம் முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கியதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச திரைப்பட விழாவானது டிசம்பர் 13 முதல் 20-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT