தமிழ்நாடு

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

DIN


சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை புயல் சின்னமாக உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், நாகப்பட்டினம், கடலூர், எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை இது புயலாக வலுப்பெற்று ஆந்திரா நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தற்போது இது சென்னைக்கு 1140 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. முதலில் வட தமிழகம் - ஆந்திரா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாழ்வு மண்டலம் தீவிரப் புயல் சின்னமாக மாறி ஆந்திரா நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழ்வு  மண்டலம் தீவிரப் புயலாக மாறி ஆந்திராவை நோக்கி நகரும் என்றும், தற்போது இது 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT