தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 94.27 அடியாகச் சரிவு

DIN


மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 94.27 அடியாக இருந்தது. 
அணைக்கு நொடிக்கு 1,093 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 16,500 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 57.66 டி.எம்.சி.யாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் உபரி நீர் போக்கி பகுதி வறண்டு பாறைகளாகக் காட்சியளிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 1,093 கன அடியாகச் சரிந்தது. நீர் வரத்து சரிந்த நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கும் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், அணையின் இடது கரையில் உள்ள 16 கண் மதகு பகுதி வறண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT