தமிழ்நாடு

79.78 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

DIN

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 79.78 லட்சமாக உள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை குறித்த விவரங்களை வயது வாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 20 லட்சத்து 69 ஆயிரத்து 337 பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 17 லட்சத்து 9 ஆயிரத்து 845 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 30 லட்சத்து 46 ஆயிரத்து 619 பேரும், 36 வயது முதல் 56 வயது வரையுள்ள முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் என்ற வகையில் 11 லட்சத்து 46 ஆயிரத்து 898 பேரும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். 
மேலும், 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 730 பேர் பதிவு செய்து காத்திருப்பதாக தமிழக அரசு தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மொத்தமாக, 79 லட்சத்து 78 ஆயிரத்து 429 பேர் அரசு வேலைக்காக காத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT