தமிழ்நாடு

கல்வி நிறுவனங்களின் அங்கீகார தர நிலையை இணையத்தில் வெளியிட வேண்டும்: யுஜிசி

DIN

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் அவர்களுடைய அங்கீகார தர நிலையை, கல்வி நிறுவன இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் வெளியிட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கும் யுஜிசி அண்மையில் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- 
உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உயர் கல்வி நிறுவனங்கள் குறித்த உண்மையான தகவல்கள், மாணவர்களையும், பெற்றோரையும் சென்று சேர வேண்டும் என்பதை முக்கியமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 
அதன்படி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தங்களுடை ய அங்கீகார தர நிலையை அல்லது இன்னமும் அங்கீகாரம் பெறவில்லை என்ற தகவலை அனைவருக்கும் தெரியும் வகையில் கல்லூரி இணையதளத்தில் முகப்புப் பக்கத்தில் வெளியிட வேண்டும். தகுதி இருந்தும், அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத விவரமும் வெளியிடப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT