தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜராக எம்பி உள்பட மேலும் மூவருக்கு சம்மன்! 

ஜெயலலிதா மரணம் குறிதது நடத்தப்படும் விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அதிமுக எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மேலும் மூவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

DIN

சென்னை: ஜெயலலிதா மரணம் குறிதது நடத்தப்படும் விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அதிமுக எம்.பி மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மேலும் மூவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், இது குறித்த உண்மை நிலையை வெளிக் கொணர நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தது.

இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழு விசாரணை ஆணையத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். இந்த விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் விசாரணை ஆணையத்தில் ஆஜராக, அதிமுக எம்.பி மனோஜ் பாண்டியன், ஜெயலலிதாவின் சமையல்காரர் ராஜம்மாள் மற்றும் ஓட்டுநர் ஐயப்பன் ஆகிய மூவருக்கும் ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இவர்களில் ராஜம்மாள் 21-ஆம் தேதியும், மனோஜ் பாண்டியன் 22-ஆம் தேதியும் ஆஜராகுமாறும், ஓட்டுநர் அய்யப்பனை 23-ஆம் தேதி ஆஜராகுமாறும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT