தமிழ்நாடு

பி.எஸ்.என்.எல். இணைப்பு முறைகேடு: வரும் 21-இல் சிபிஐ தரப்பு வாதம்

DIN

பி.எஸ்.என்.எல். இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்குப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி சிபிஐ தரப்பு வாதம் தொடங்கப்பட உள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு பி.எஸ்.என்.எல். அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதிமாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. 
இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் தரப்பில், வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீதான வாதம் நிறைவடைந்த நிலையில் சிபிஐ தரப்பு வாதத்துக்காக விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு 14-ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் நிறைவடைந்து விட்டன. சிபிஐ தரப்பு வாதத்தை எப்போது தொடங்கப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், தங்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் விசாரணையை ஒத்திவைக்க கால அவகாசம் கோரினார். இதனையடுத்து நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் - கான்பூரில் 6 பேர் கைது

அரண்மனை - 4 வசூல் இவ்வளவா?

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

SCROLL FOR NEXT