தமிழ்நாடு

மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்: பள்ளிகளில் காண ஏற்பாடு செய்ய அறிவுறுத்தல்

DIN

பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் வெள்ளிக்கிழமை (பிப்.16) கலைந்துரையாடும் நிகழ்ச்சியைக் காண அனைத்துப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ரெ. இளங்கோவன் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ-மாணவிகள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை (பிப்.16) காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒரு மணி நேரம் காணொலிக் காட்சி வழியாகக் கலந்துரையாடுகிறார். 
இந்நிகழ்ச்சி தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், கணினி, மடிக்கணினி, செல்லிடப்பேசி மூலமும் இந்த கலந்துரையாடலைக் காணலாம். பிரதமரின் இந்தக் கலந்துரையாடல் 
நிகழ்ச்சியைப் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் பார்க்கவும், கேட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

SCROLL FOR NEXT