தமிழ்நாடு

வல்லத்தில் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் காளை சாவு

DIN

தஞ்சாவூர் அருகே வல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 14 பேர் காயமடைந்தனர். மாடு முட்டியதில் ஒரு காளை இறந்தது.
வல்லம் தெற்கு மேட்டுத் தெருவில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
இதில், வல்லம் பழனியாண்டவர் கோயில் காளை வாடிவாசல் வழியாக முதலில் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, சுமார் 540 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளைப் பிடிக்க ஏறத்தாழ 250 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் சுழற்சி முறையில் 50 பேர் வீதம் களத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
முன்னதாக, மாடு பிடி வீரர்களைச் சுகாதாரத் துறைத் துணை இயக்குநர் ஏ. சுப்பிரமணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில், தகுதியானவர்கள் மட்டுமே மாடு பிடிக்க அனுமதிக்கப்பட்டனர். இதேபோல, கால்நடைத் துறை உதவி இயக்குநர் பழனிசாமி தலைமையிலான குழுவினர் மாடுகளைப் பரிசோதித்து, தகுதியான மாடுகளை மட்டும் வாடிவாசலுக்கு அனுப்பி வைத்தனர்.
காளைகளை அடக்கியவர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், குத்துவிளக்கு, சில்வர் பாத்திரம், வெள்ளிக்காசு, குக்கர், ரொக்கப் பரிசு போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. 
இதில், காளை முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 5 பேரும், மாட்டை அழைத்து வந்த 9 பேரும் என மொத்தம் 14 பேர் காயமடைந்தனர். இவர்களில் பலத்தக் காயமடைந்த 9 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
காளை சாவு: இதனிடையே, திருவையாறு வட்டத்துக்கு உள்பட்ட வடுகக்குடி தெற்குத் தெருவைச் சேர்ந்த எம். ராஜ்குமாரின் காளை, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மாட்டைப் பிடித்துச் செல்லும் இடத்துக்கு ஓடி வந்தது. அப்போது, இவரது காளை மீது அங்கிருந்த மற்றொரு மாடு முட்டியது. இதில், பலத்தக் காயமடைந்த ராஜ்குமாரின் காளை நிகழ்விடத்திலேயே இறந்தது.
இதேபோல, மனையேறிப்பட்டி காளியம்மன் கோயில் காளையின் விலா பகுதியில் மற்றொரு மாடு முட்டியதில் பலத்தக் காயமடைந்தது. இதையடுத்து, காயமடைந்த மாட்டுக்குக் கால்நடை மருத்துவர்கள் 7 தையல்கள் போட்டு சிகிச்சை அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT