தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம்: தனியார் பேருந்துகள், ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

தினமணி

ராஜபாளையம் பகுதியில் அரசுப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் மேற்கொள்ள பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அரசுப் பேருந்துகளில் குறைந்தளவு கூட்டமே காணப்படுகிறது.

தமிழகத்தில் அண்மையில் அரசுப் பேருந்து கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஒரு ரூபாய் மட்டும் குறைக்கப்பட்டது. இந்நிலையில் அரசுப் பேருந்துகளை விட தனியார் பேருந்து கட்டணம் மற்றும் ரயில் கட்டணம் மிகக் குறைவாக இருப்பதால் அவற்றில் பயணம் செய்ய பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் கட்டண உயர்வுக்கு முன்பு ரூ.60 வசூலிக்கப்பட்டது. தற்போது ரூ.85 வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்துகளில் ரூ.65 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

சிவகாசியில் இருந்து ராஜபாளைத்துக்கு முன்பு ரூ.38 வசூலிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் அரசு நகர விரைவுப் பேருந்துகளில் ரூ.48 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கட்டணக் குறைப்புக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் சாதாரண அரசுப் பேருந்துகளில் ரூ.35-ம், நகர விரைவுப் பேருந்துகளில் ரூ.44-ம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் தனியார் பேருந்துகளில் சிவகாசியில் இருந்து ராஜபாளையத்துக்கு ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்டு வரும் நகர விரைவுப் பேருந்துகளில் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் பேருந்துகளிலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலித்துக் கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டது. ஆனால் தனியார் பேருந்துகளில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் ஏராளமானோர் தனியார் பேருந்துகளிலும், ரயில்களிலும் அதிகளவில்  பயணித்து வருகின்றனர். எனவே ராஜபாளையம் மற்றும் இந்த வழியாக பிறப் பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT