தமிழ்நாடு

"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது': ஹெச்.ராஜா

தினமணி

தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்தார். 

புதுதில்லியில் இருந்து புதன்கிழமை மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: கோயில்களின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை ஆறு வாரங்களில் கணக்கிட்டு மீட்க வேண்டும். சந்தை மதிப்பில் வாடகை மற்றும் குத்தகைகளுக்கு விட வேண்டும். வாடகை தராதவர்கள் மற்றும் கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து அதனை மீட்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கதக்கது. 

தமிழகத்தில் 50 ஆண்டு கால கழகங்களின் ஆட்சியில் கோயில் சொத்துக்கள் பெருமளவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கோயில் சொத்துக்கள் குறித்து எனக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே பக்தர்கள் தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில்களின் சொத்துகள் குறித்த தகவல்களை இந்து சமய அறநிலையத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். 

ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழ மன்னர்களை இழிவாக பேசிய திராவிட கழக தலைவர் வீரமணி, திரெளபதியை இழிவாக பேசிய பழ.கருப்பையா ஆகியோரை கண்டிக்கிறேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கடைகளை வேறு இடங்களில் அமைக்க கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு சுற்றுலாத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூ.14 கோடியை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியுள்ளது. 

சட்டப்படி பார்த்தால் அறநிலையத்துறை அலுவலகம் கூட கோயிலுக்குள் இருக்கக்கூடாது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள கடைகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். வேண்டுமானால் காலியாக உள்ள கோயில்நிலங்களில் கடைகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT