தமிழ்நாடு

கைரேகை விவகாரத்தில் ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது: அரசு மருத்துவர் பாலாஜி விளக்கம்

DIN

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானது என்று அரசு மருத்துவர் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு, அரசு மருத்துவர் பாலாஜி நேற்று 3வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில், தமிழக சுகாதாரத் துறை செயலர் கூறியதால்தான், ஜெயலலிதாவிடம் மருத்துவர் பாலாஜி கையெழுத்துப் பெற்றதாக ஊடகங்களில் நேற்று செய்திகள் வெளியாகின.

இது குறித்து இன்று அவர் விளக்கம் அளித்தார். அதாவது, சுகாதாரத் துறை அமைச்சரோ, அந்த துறை செயலரோ வாய்மொழியாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் வேட்பாளருக்கான அறிக்கையில், சுகாதாரத் துறை செயலர் கூறியதால் நான் கையெழுத்துப் பெற்றேன் என்று கூறுவதில் உண்மையில்லை. என்னுடைய அதிகார வரம்புக்கு உட்பட்டே ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT