தமிழ்நாடு

புதுச்சேரி - பெங்களூரு இடையே மீண்டும் விமான சேவை

DIN

புதுச்சேரி - பெங்களூரு இடையே விமான சேவை வியாழக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
புதுச்சேரியில் இருந்து பெங்களுருக்கு விமான சேவை 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எனினும், 2014-இல் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், புதுச்சேரி - பெங்களூரு இடையிலான விமான சேவையை மீண்டும் தொடங்க புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்படி, புதுச்சேரி - பெங்களுரு இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கியது. 78 இருக்கைகள் கொண்ட பம்பாரிடியர் விமானம்
பெங்களூரில் இருந்து வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு புதுச்சேரிக்கு வந்தது. பின்னர், இங்கிருந்து 10.50 மணிக்கு புறப்பட்டு 12.10-க்கு பெங்களூரை அடைந்தது. புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலம், கோவை, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கும் விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

SCROLL FOR NEXT