தமிழ்நாடு

போலி வருமானவரித் துறை அதிகாரியை புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விசாரணை

DIN

போலீஸ் காவலில் உள்ள பிரபாகரனை தற்போது புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெ. தீபாவின் வீட்டிற்கு கடந்த சனிக்கிழமை, போலி வருமானவரித்துறை அதிகாரியாக நடித்து சோதனையிட வந்த நபர், போலீஸ் விசாரணையின் போது தப்பி ஓடினார்.

பின்னர் அவர் தாமாகவே முன்வந்து காவல்நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் போலி வருமானவரித்துறை அதிகாரியாக நடித்த நபர் விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபாகரனை, மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில் பிரபாகரனை தற்போது புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலி அடையாள அட்டை தயாரித்தது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT