தமிழ்நாடு

சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

DIN

ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏரியில் ஐந்து தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. 
அங்கு சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 
5 தமிழர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, காவல் துறையினர் மீது மனித உரிமை அமைப்புகள் சார்பில் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளை எளிதில் ஒதுக்கிவிட முடியாது. 
இந்த வழக்கை ஆந்திர காவல்துறை விசாரித்தால் நீதி கிடைக்காது. எனவே, அதனை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT