தமிழ்நாடு

விஷவாயு தாக்கி பலியான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உடனே நிவாரணம் 

DIN

உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை ஆஜரான சமூக ஆர்வலர் பாடம் நாராயணன், "காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே புதன்கிழமை (பிப்.14), தனியார் உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தபோது துப்புரவு தொழிலாளர்கள் முருகேசன், மாரி, உணவு விடுதியின் மின் பணியாளர் ரவி ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். எனவே, மனிதக் கழிவுகள் அகற்றுவது தொடர்பாக, தான் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும்' என முறையிட்டார். 
அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, "அரசு பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து விழிப்புணர்வு கொடுத்து வந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது' எனத் தெரிவித்தார். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் உணவு விடுதியில் நிகழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் வழக்கை திங்கள்கிழமை (பிப்.26) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT