தமிழ்நாடு

ஏர்செல் சேவை நாளை காலைக்குள்  சீராகும்: தலைமைச் செயல் அதிகாரி தகவல் 

ஏர்செல் சேவை  வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள்  சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: ஏர்செல் சேவை  வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள்  சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி: ஏர்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று வியாழனன்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக தமிழகத்தில் ‘ஏர்செல்’ சேவை இன்றும் முடங்கியது. இதன் காரணமாக பொது  மக்களுடைய இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏர்செல் சேவை  வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நாளை காலைக்குள்  சீராகும் என்று அந்நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது

தமிழகத்தில் ஏர்செல் செல்லிடப் பேசி சேவையானது 60% சரி செய்யப்பட்டுள்ளது. வியாழன் நள்ளிரவுக்குள் செல்போன் சேவை முழுமையாக சீர் செய்யப்படும். தொழில்நுட்ப சேவை பொறியாளர்கள் ஆயிரம் பேர் சிக்னல்  சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலைக்குள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஏர்செல் சேவை சீராகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீடே வெறிச்சோடி இருக்கு.. மதன் பாப் மறைவுக்கு செல்லாத நடிகர்கள்!

கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

5 ஆண்டுகள் விளையாடுவேன், ஆனால்... ஓய்வு குறித்து தோனி!

டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிவாங்கி!

SCROLL FOR NEXT