தமிழ்நாடு

சித்தா உதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன உத்தரவு: முதல்வர் வழங்கினார்

DIN

சித்த உதவி மருத்துவ அலுவலர்களாக 100 பேருக்கும், ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்களாக 4 பேருக்கும் பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார். 
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 100 சித்த உதவி மருத்துவ அலுவலர்கள், ஒரு ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர், 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்கள் என 105 உதவி மருத்துவ அலுவலர்கள் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டனர். 
அவர்களுக்கான பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கிப் பேசியது:-
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக மருத்துவர்கள் 105 பேருக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டன. 
பொதுமக்களுக்குத் தேவையான சிகிச்சைகள் தமிழகத்திலேயே முறையாக வழங்கப்படுகிறது. 
இந்தியாவிலேயே சுகாதாரத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நோய்வாய்ப்பட்டிருக்கும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வரும்போது நல்ல முறையில் சிகிச்சை அளித்து குணமடையக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. மருத்துவர்களும் சிறந்த முறையில் பணியாற்றி மக்கள் சேவை செய்ய வேண்டும் என்றார் அவர். 
சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) க.சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்பட முக்கிய அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT