தமிழ்நாடு

'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு நிறைவு: சென்னை பல்கலை.யில் நாளை கருத்தரங்கம்

DIN

வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் 75-வது ஆண்டு நிறைவையொட்டி, சென்னைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து, பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:--
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தமிழகத்தின் பங்கை நினைவுகூறும் வகையில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. 
இதில், 60-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. நாடு முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் கருத்தரங்கள் பங்கேற்க உள்ளனர்.
கருத்தரங்கை தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்க உள்ளார். உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி உள்ளிட்ட பலர் தொடக்க விழாவில் உரையாற்ற உள்ளனர். பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறை தலைவர் எஸ்.எஸ்.சுந்தரம் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

4வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் தங்கம்!

பிளஸ் 2 தேர்வு: திருப்பூர் மாவட்டத்தில் 97.45% தேர்ச்சி

குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

SCROLL FOR NEXT