தமிழ்நாடு

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு கோரிய வழக்குகள் : உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

DIN

ஒக்கி' புயலால் உயிரிழந்த அனைவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
'கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 29, 30 ஆம் தேதிகளில் வீசிய ஒக்கி புயலால் பலத்த சேதம் ஏற்பட்டது. பொதுமக்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்துள்ளனர். மாவட்டத்தில் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புயலால் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சமும், உயிரிழந்த பொதுமக்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. புயலால் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது இருபக்கமும் சமமான ஒன்றுதான். இதில் மீனவர், பொதுமக்கள் என பாகுபாடு காட்டுவது முறையல்ல. எனவே பொதுவாக அனைவரின் குடும்பத்துக்கும் ரூ.20 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும்' என்று கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த வழக்குரைஞர் புகழ்காந்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதேபோல்,, பச்சைத் தமிழகம் கட்சியின் பொதுச் செயலர் கதிரவராயன்,, மற்றொரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் மாதம் ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்க வேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்கவும் உத்தரவிட வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT