தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி, குடும்ப மருத்துவருக்கு விசாரணை ஆணையம் சம்மன்

DIN


சென்னை: ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அந்த வகையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தவர்கள், அவருடன் இருந்தவர்கள், அவரது மரணம் தொடர்பாக தகவல் தெரியும் என்று கூறியவர்கள் என பலரிடமும் ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இன்றும், அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் சத்யபாமா நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி உள்ளிட்ட பல முக்கிய நபர்களுக்கு ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு தொடர்ச்சியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவராக இருந்து வந்த மருத்துவர் சிவக்குமார் வரும் 8ம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனன் வரும் 9ம் தேதியும், பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி ஜனவரி 10ம் தேதி ஆஜராகுமாறும் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு, அரசு மருத்துவர் பாலாஜி 2வது முறையாக வரும் 11ம் தேதி, விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சாமிநாதன் வரும் 12ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT