ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனையடுத்து இதற்கான பணிகள் அண்மையில் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியானவருக்கு அரசு செலவில் நினைவிடம் கூடாது என்றும் எனவே, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.