தமிழ்நாடு

நல்லது செய்து ரஜினிகாந்த் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை: ஒரு வித்தியாச வாழ்த்து! 

சினிமாவில் வருவது போல நல்லது செய்து அதன் காரணமாக ரஜினிகாந்த் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை என்று அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஒரு வித்தியாசமான வாழ்த்து  தெரிவிக்கப்பட்டுள்ளது  

DIN

சென்னை: சினிமாவில் வருவது போல நல்லது செய்து அதன் காரணமாக ரஜினிகாந்த் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை என்று அவரது அரசியல் பிரவேசத்திற்கு ஒரு வித்தியாசமான வாழ்த்து  தெரிவிக்கப்பட்டுள்ளது  

கடந்த மாத இறுதியில் தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் தனது ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியினை நடத்தி வந்த நடிகர் ரஜினிகாந்த், அதன் இறுதிநாளான டிசம்பர் 31-ஆம் தேதி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அதற்கு இதுவரை கலவையான கருத்துக்களை எதிர்வினையாக வந்து கொண்டுள்ளன.

அந்த வரிசையில் இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்க்ஷேவின் மகனான நமல் ராஜபக்க்ஷே தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனது தந்தை ராஜபக்க்ஷேவுக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் அரசியலில் நுழையவிருக்கிறார். சிறப்பான செய்தி. சினிமாவைப் போலவே வாழ்க்கையும் இருக்காது என்று நம்புகிறேன்.அவரது படமான சிவாஜியில் வருவது போன்று நல்லது செய்து அதன் காரணமாக ரஜினிகாந்த் சிறைக்கு செல்வதை விரும்பவில்லை. அரசியலுக்கு ரஜினிகாந்தை வரவேற்கிறேன்.

இவ்வாறு நமல் ராஜபக்க்ஷே தெரிவித்துள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT