தமிழ்நாடு

ஆடுகளை வெட்ட வேண்டாம்: ரஜினிக்கு 'பீட்டா'வின் அவசரக் கடிதம்! 

DIN

சென்னை: ரஜினியின் அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு அவரது ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ள விழாவில், ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துமாறு நடிகர் ரஜினிக்கு விலங்குகள் நல அமைப்பான  'பீட்டா' வேண்டுகோள் விடுத்துள்ளது.

அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தனது ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.  இதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதனை அவர்கள் ஒவ்வொரு வழியில் வரவேற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மதுரை அழகர் கோவிலில் வரும் ஞாயிறு அன்று ஆடுகளை வெட்டி சிறப்பு பூஜையொன்றை நடத்த ரஜினி ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நிகழ்வில் ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு வலியுறுத்துமாறு நடிகர் ரஜினிக்கு விலங்குகள் நல அமைப்பான  'பீட்டா' வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக 'பீட்டா' அமைப்பின் பொது நல கொள்கைகள் பிரிவின் தலைவர் நிகுஞ்ச் ஷர்மா,நடிகர் ரஜினிகாந்திற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஏற்கனவே உங்கள் கையில் உள்ள ஆற்றலின் மூலம் பலரது வாழக்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதன் அடிப்படையில் உங்களது அரசியல் பிரவேசத்தை முன்னிட்டு, ரசிகர்கள் கொண்டாடத் திட்டமிட்டுள்ள விழாவில், ஆடுகளை வெட்ட வேண்டாம் என்று வலியுறுத்துமாறு மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம்.  ஆடுகளை வெட்டுவது என்பது கொடூரமானதுடன் இந்திய சட்டங்களுக்கு எதிரான ஒன்றாகும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT