தமிழ்நாடு

குட்கா விவகாரம்: திமுக வெளிநடப்பு

DIN

குட்கா விவகாரம் தொடர்பாக, சட்டப் பேரவையில் இருந்து திமுக வெள்ளிக்கிழமை வெளிநடப்புச் செய்தது.
சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் போதே, பேரவைத் தலைவர் தனபால் குறுக்கிட்டார்.
'நீதின்றத்தில் நடைபெறும் ஒரு வழக்கு குறித்து இங்கு விவாதிக்க முடியாது. எனவே, இந்தப் பிரச்னையைப் பற்றி பேச அனுமதி தர முடியாது' என்றார். இதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT