தமிழ்நாடு

தற்போதைக்கு புதிய கட்சி இல்லை: டிடிவி தினகரன் 

DIN

புதிய கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை என்று தினகரன் தெரிவித்துள்ளார்.

தனிக் கட்சி தொடங்குவது தொடர்பாக எம்ஜிஆர் பிறந்த நாளில் (ஜன.17) முடிவு செய்யப்படும் என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று தெரிவித்திருந்தார். விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி பொங்கல் விழா கொண்டாடிய அவர் இவ்வாறு கூறினார்.

இதையடுத்து அவர் புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைக்கு புதிய கட்சி இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று தினகரன் கோத்தகிரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 
புதிய கட்சி தொடங்குவதற்கான அவசியம் ஏற்படவில்லை. அதிமுக அம்மா பெயரில் செயல்பட முடியாதபோது வேறுவழியில்லாமல் புதிய கட்சி தொடங்கப்படும். புதிய கட்சி தொடங்கினால் அது அதிமுக, இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவே இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

அணியை சரிவிலிருந்து மீட்ட வெங்கடேஷ் ஐயர்; மும்பைக்கு 170 ரன்கள் இலக்கு!

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

SCROLL FOR NEXT