தமிழ்நாடு

மாணவர்களை புரிந்து ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

DIN


சென்னை: மாணவர்களை புரிந்து கொண்டு ஆசிரியர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் செயல்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

சென்னையில், தனியார் பள்ளி மாணவர் மரணம் அடைந்தது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களிடம் ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க கவுன்சிலிங் தரப்படும் என்று கூறினார்.

மேலும், மாணவர்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் ஆசிரியர்கள் அறிவுரை தர வேண்டும். தனியார் பள்ளியில் மாணவர் உயிரிழப்பு தொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களின் மனதையும் உடலையும் புரிந்து கொண்டு ஆசிரியர்கள் செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு தேவைப்பட்டால், அவர்கள் விருப்பப்பட்டால் யோகா பயிற்சி தரப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT