முகப்பு
தமிழ்நாடு

சென்னை வந்தார் அமித்ஷா

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். 

Updated On : 9 ஜூலை, 2018 at 12:57 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். 

சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வரவேற்றனர். 

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கியுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பா.ஜ.க. நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

Advertisement

ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவற்றை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாகப் பிரித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று சென்னை வந்துள்ள அமித்ஷா, இந்த சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநிலத் தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

அமித்ஷா கடந்த ஆண்டு மே 10, 11 தேதிகளில் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24-ஆம் தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.